சிருஷ்டி-8 in www.padmalogy.blogspot.in
என்னுடைய மகள் வயிற்றுப் பேரனுக்கு இப்போது 10 வயதாகிறது. அவனுக்கும் என் மகளுக்கும் இடையே ஒரு வாக்குவாதம்.
என் மகள்: ‘நான் தான் உன்னை ரொம்ப லவ் பண்ணறேன்’.
என் பேரன்: ‘இல்லையில்லை நான் தான் உன்னை ரொம்ப லவ் பண்ணறேன்’.
என் மகள்: சரி, நீ என்னை எந்த அளவுக்கு லவ் பண்ணறே?
என் பேரனின் பதிலில் நாங்கள் புல்லரித்துப் போனோம். அப்படி என்ன சொல்லி இருப்பான் என் பேரன்?
என் பேரனின் பதிலை நீங்களே கண்டுபிடியுங்கள்:
A: வானமளவு
B: கடலளவு
C: உலகலவு
D: இவை எதுவுமில்லை...
உங்கள் பதில் D என்றால், சரியான பதில் என்னவாக இருக்கும்?
பதில் D: இவை எதுவுமில்லை.
பேரனின் பதில்:
‘அம்மா! நீ என்னை எவ்ளோ லவ் பண்ணறயோ அதைவிட அதிகமா நான் உன்னை லவ் பண்ணறேன்’
பத்மா in சிருஷ்டி-8 @ www.padmalogy.blogspot.in
No comments:
Post a Comment